இன்னைக்கு ராஜ் டிவில 'பார்த்தேன் ரசித்தேன்' படம் போட்ருந்தான். எப்போவுமே அப்படியே 10-15 வருஷம் பின்னாடி கூட்டிட்டு போற படம் அது எனக்கு. என் திருநெல்வேலி ஆச்சியை ஞாபகபடுத்துற படம். திருநெல்வேலி ஆச்சி என் அம்மா பாட்டி. அந்த ரொமாண்டிக் மூவிக்கும் என் பாட்டிக்கும் அப்படி என்ன கனக்க்ஷன் இருந்துட முடியும் ?! எதுவும் இல்ல தான். இது எனக்கும் என் ஆச்சிக்குமான கனக்க்ஷன்.
சின்ன வயசுல எங்க அப்பா குடும்பத்துல ஒரு பழக்கம் இருந்துச்சு. எல்லா ஸ்கூல் வக்கேஷனுக்கும் ரெண்டு மாசம் லீவு கெடைக்கும். அப்பா வீட்டு கசின்ஸ் ஓட ஒரு டீல் இருக்கும். சின்ன வயசுல எல்லா அவங்க கசின்ஸ்-ஆ இல்ல. தம்பி தங்கச்சிய தான் இருந்தாங்க. எங்க டீல் என்னானா, முதல் ஏப்ரல் மாசம் எல்லாரும் அவங்கவங்க அம்மா தாத்தா வீட்டுக்கு போய் தங்கிக்கலாம். ரெண்டாவது மே மாசம் எல்லாரும் எங்க அப்பா தாத்தா வீட்டுக்கு வந்துடனும். என் அத்தை பசங்களையும் தாத்தா வீட்டுக்கு அனுப்ப சொல்லி மாத்தி மாத்தி ஒவ்வொருத்தரா அத்தை கிட்ட கெஞ்சுவோம் . "நான், செல்வி, கார்த்தி, மகேஷ் எல்லாம் ஆளூருக்கு வந்துட்டோம் அத்தை. பவி, வெங்கடேஷ்- ஆ அனுப்பி வைங்க" நு. ஆளூர் தான் என் அப்பா தாத்தா ஊரு. அழகான குட்டி கிராமம்.
சரி இப்போ ஏப்ரல் மாசம் தான் ஆகி இருக்கு. என் ஆச்சி வீட்டுக்கு போலாம் வாங்க :)
எப்போவுமே அம்மா தான் என்னையும், தம்பியையும் பஸ் ல திருநெல்வேலிக்கு கூட்டிட்டு போவாங்க. என் தம்பி கார்த்தி சரியான அம்மா அப்பா புள்ள. நான் மட்டும் மாமா அத்தை ஆச்சி எல்லாரோடவும் நல்லா ஒட்டிப்பேன். அம்மா ரெண்டு நாள் ஆச்சி வீட்ல தங்கிட்டு கார்த்திய கூட்டிட்டு கெளம்பிடுவாங்க என்ன மரியாதையா ஒழுங்கா நடந்துக்க சொல்லிட்டு. அப்புறம் தான் என் ராஜ்ஜியம் ஆரம்பிக்கும் ஆச்சி வீட்டுல.
"ஆச்சி என்னைக்கு என்ன சினிமாக்கு கூட்டிட்டு போவ?? " - இது ஆல்வேஸ் நான்.
"மாமா வரட்டும் டி, கேப்போம் " - இது ஆல்வேஸ் ஆச்சி.
என் ஆச்சிக்கு சினிமா பாக்க ரொம்ப புடிக்கும் னு என் அம்மா சொல்லி கேட்டிருக்கேன். அம்மா சின்ன பொண்ணா இருந்தப்போ, தாத்தா லேட்டா வருவாங்க னு தெரிஞ்சா, அம்மாவையும், குட்டி மாமாவையும், ரெண்டு சித்திங்களையும் பக்கத்துக்கு வீட்டு அக்கா கிட்ட ஒப்படைச்சிட்டு, தெருவுல இருந்த மத்த ஆண்டீஸ் ஓட சேர்ந்து நைட் ஷோ பாக்க போவாளாம் என் ஆச்சி. தாத்தா இறந்த அப்புறம் ஆச்சி சினிமாக்கு போறதில்ல னு அம்மா சொல்லி இருக்காங்க.
அடுத்த வாரத்துல இருந்து "கூட்டிட்டு போவியா மாட்டியா" னு படுத்துவேன். அதுக்கடுத்த வாரம் "கூட்டிட்டு போறியா இல்லையா" னு ஆரம்பிப்பேன். அதுக்கடுத்து "கூட்டிட்டு போகலைனா என் வீட்டுக்கு போயிருவேன்"னு மெரட்டுவென்.
அப்படி ஒரு மூணாவது வாரம், குட்டி மாமா வீட்டுக்கு மத்தியானம் சாப்பிட வரும்போது ஆச்சி ஆரம்பிச்சா "லேய் மணிகண்டா, இந்த பிள்ளைய ராயல் தேட்டருக்கு கூட்டிட்டு போனும் ல, கேட்டுட்டே இருக்கா". குட்டி மாமா பதில் ஏதும் சொல்லாம சாப்புட்டே முடிச்சுட்டாங்க. கை கழுவிட்டு கெளம்பும்போது, ஆச்சிகிட்ட சிரிச்சுட்டே காசு குடுத்துட்டு சொன்னாங்க "தேட்டர்ல எதாச்சும் திங்கிறதுக்கு வாங்கி குடும்மா பிள்ளைக்கு ". மாமா க்கு தெரியும் ஆச்சிக்கு சினிமா புடிக்கும் னு.
ஒரு வழியா நானும் ஆச்சியும் சாயங்காலம் சினிமா தியேட்டருக்கு கெளம்புனோம். ஒரு ஒயர் கூடைல ஒரு பாட்டில் தண்ணி நெரப்பி வச்சுகிட்டா. போற வழியில விநாயக பேக்கரி ல 200 கிராம் சீவல் வாங்கி வச்சுகிட்டா. நான் கூடையா வாங்கி கைல தூக்கிட்டு வந்தேன். ஆச்சிக்கு தெரியும் அந்த கூடை முழுசா என் சந்தோஷம் நெறஞ்சு இருக்குனு. அப்படியே நடந்து தியேட்டர் வரை நெல்லையப்பர் கோவில் வழியா கதை பேசிட்டே போனோம்.
ராயல் தியேட்டர் ல டிக்கெட் வாங்கிட்டு ஒரு க்யுல போனோம். வழியில கான்டீன் கிராஸ் ஆகும்போது ஆச்சிய்ய நிமிந்து பாத்தேன். "அதான் சீவல் இருக்குல்லடி" ன்னா. நான் குனிஞ்சிகிட்டேன். உடனே ரெண்டு கை முறுக்கு, ரெண்டு கடலை மிட்டாய் வாங்கி வச்சிகிட்டா கூடைல. அப்படி ஒரு பல்பு எரிஞ்சுது என் மூஞ்சில.
போய் சீட்ல உக்காந்து படமும் ஆரம்பிச்சது. பாட்டி சீவல் பாக்கட்டா எடுத்து கைல குடுத்துட்டு தண்ணி வேணா எடுத்து குடிச்சுக்கோ னு சொன்னா. பார்த்தேன் ரசித்தேன் ல வர்ற காதல், ரொமான்ஸ், சண்ட, கோபம், பிரஷாந்த், லைலா, சிம்ரன் எதுமே புரியாத வயசு எனக்கு. அப்பப்போ ஆச்சி in between சொல்றத மட்டும் கேட்டுட்டே சீவல்ல புல் போகஸ் காட்டிட்டு இருந்தேன். லைலாவுக்கு இதான் முதல் படம், நல்லா கலரா இருக்கா னு ஆச்சி சொன்னப்போ she became my favorite heroine then :)
படம் பாக்கறத விட சீவல் கை முறுக்கு கடலை மிட்டாய் யாருக்கும் தராம நாமளே சாப்டற சந்தோஷம் அலாதியானது எனக்கு. இண்டர்வல் குள்ள சீவல் மற்றும் அரை பாட்டில் தண்ணிய காலி பண்ணிட்டேன். மிச்சம் இருந்த கை முறுக்கும் கடலை மிட்டாயும் மிச்ச படம் பாக்கும்போது காலி பண்ணுனேன்.
படம் முடிஞ்சு நானும் ஆச்சியும் அப்படியே நெல்லையப்பர் பிரகார வீதியில வளையல், கழுத்துள்ள போடற பாசி, செப்பு சாமான் எல்லா வாங்கிட்டு வந்து சேந்தோம் அன்னைக்கு.
காலேஜ் செகண்ட் இயர் படிக்கும்போது என் ஆச்சி தவறிட்டா. அதுவரை பார்த்தேன் ரசித்தேன் - ல பாட்டு நல்லா இருக்கும், 'எனக்கென ஏற்கனவே' female version ல ஹரிணி வாய்ஸ் நல்லா இருக்கும், சிம்ரன் நல்லா actress அப்டிங்கறது எல்லாம் தான் தோணும். அதுக்கப்பறம் ஒவ்வொரு வாட்டியும் 'எனக்கென ஏற்கனவே' கேட்டாலோ, அந்த படத்துல எதாச்சும் சீன் பாத்தாலோ , கூட பக்கத்துல இருக்கறவங்ககிட்ட நான் சொல்ற ஒரே விஷயம் "பார்த்தேன் ரசித்தேன் என் திருநெல்வேலி ஆச்சி கூட பாத்தா படம்" ங்கறது தான்.

இந்த memory என்னைக்குமே அழிஞ்சுற கூடாதுங்கற ஒரே காரணத்துக்காக இத பதிவு செஞ்சு வைக்கறேன். When I grow old, i always want to cherish this memory of my ஆச்சி who was extra ordinarily fond of me.